மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி ஆணையாளர் வினோத்குமார் தலைமையிலும் நகர மன்ற தலைவர் மெஹரிபா அசரப் அலி துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி முன்னிலையில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கழிப்பறை பராமரிப்பு, கழிப்பறையின் அவசியம், தூய்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள், பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
இதையடுத்து நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொதுக்கழிப்பிடத்தில், தீவிர துப்புரவு பணி நடந்தது. இதில் நகர மன்ற உறுப்பினர் விஜய் காண்டியப்பன் சுகாதார ஆய்வாளர் பாஸ்கரன் மேற்பார்வையாளர்கள் கோபாலகிருஷ்ணன் ரமேஷ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share to your friends.

You missed