கோவை குறிச்சி பிரிவை சேர்ந்தவர் நவீன் குமேர் 23 இவரின் மனைவி ஷிபன (24). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று காலை வீட்டில் இருக்கும்பொழுது பனிக்குடம் உடைந்தது இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார் இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக கோவை குறிச்சி phc
இருந்து சென்ற ஆம்புலன்ஸ் சிபான அவர்களை அழைத்துக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தனர் அப்பொழுது உக்கடம் அருகே ஷிபண அவர்களுக்கு வலி அதிகரித்தது மேலும் குழந்தையின் தலை வெளியே வந்தது இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கற்பகம் சாலை அருகே ஆம்புலன்சை நிறுத்தி பைலட் யுவராஜ் உதவியுடன் பிரசவம் பார்த்தனர் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர் களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Share to your friends.

You missed