கோவை நவம்பர் 16 –

கோவை கணபதி பகுதியில் புதிய சிக்னலை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

கோவை கணபதி பகுதியில் செயல்படக்கூடிய டெக்கான் கன்வர் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்த்திக் கோவை கணபதி பகுதியில் தொடர்ந்து மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்து அதிகமாகவதால் புதிய சிக்னல் அமைக்க வேண்டும் என மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனின் ஆலோசனையின் பேரில் அதற்கான பணியை டெக்கான் கன்வர் நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து கோவை கணபதி பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு முன்பாக புதிய சிக்னலை உருவாக்கின.

இதைத்தொடர்ந்து இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடக்கி வைத்து பேசியதாவது:-

கோவை கணபதி பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத்தொடர்ந்து டெக்கான் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்த்திக் தொடர்பு கொண்டார் அவருடைய தீவிர முயற்சியால் மக்களுடன் இணைந்து இன்று சிக்னல் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும் காவல்துறையும் இணைந்து செயல்பட்டால் பல்வேறு விதமான குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும். பொதுமக்கள் எப்பொழுதும் போலீசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இது போன்று பொதுமக்களும் போலீசும் ஒன்றாக செயல்பட்டால் பல குற்ற சம்பவங்களை தடுத்து முடியும் பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்துணை ஆணையர் அசோக்குமார், கூடுதல் துணை ஆணையர் சிற்றரசு, இணை ஆணையர் சரவணன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஜம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

டெக்கான் கன்வர் நிறுவனத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அருண், சுந்தர்ராஜன், செந்தில்குமார், முன்னாள் காவல்துறை அதிகாரி பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Share to your friends.

You missed