குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்தல் என்னும் கருத்தை மையமாகக்கொண்டு கோவையிலிருந்து கோவா வரை இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நிகழ்வு கோவை ரோட்டரி கிளப் ஆப் இண்டஸ்ட்ரியல் சிட்டி சார்பாக, கோவை மாவட்ட காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அவர்கள் கொடியசைக்க இனிதே துவங்கியது. கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்டஸ்ட்ரியல் சிட்டியின் கவர்னர் ராஜ்மோகன் நாயர், பிரசிடெண்ட் கனகராஜ், செகரட்டரி சபி, ப்ராஜெக்ட் சேர்மன் சந்தோஷ், அசிஸ்டன்ட் கவர்னர் சசிகுமார், ஜி ஜி ஆர் பிரபு ஷங்கர், டிஸ்ட்ரிக்ட் டைரக்டர் மயில்சாமி மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் இதில் 20க்கும் மேற்பட்ட பைக் ரைடர்ஸ் கலந்து கொண்டனர்.குழந்தைகளுக்கான வன்கொடுமைகளை தடுப்பது, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போன்ற தகவல்கள் இந்நிகழ்வில் பகிரப்பட்டது.

Share to your friends.

You missed