ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளை சேர்க்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளிகள் அளவிலான செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வண்ணமாக நவம்பர் 14 குழந்தைகள் தினம் முதல் டிசம்பர் 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வரை பல்வேறு நிகழ்ச்சிகளை வட்டார வள மையம் சார்பாக ஏற்பாடு செய்துள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சியாக நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை ஒன்றியத்தில் உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் கல்வி மற்றும் நலனுக்காக அனைத்து முயற்சிகளை செய்வோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று நவம்பர் 16ஆம் தேதி விழிப்புணர்வு பேரணி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ஆகிய இரண்டு குறுவள மையங்களில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பேரணியானது இனிதே நடைபெற்று முடிந்தது.

இப்பேரணியில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் திருமதி கலைச்செல்வி சாந்தலிங்க குமார் அவர்கள் , கோட்டூர் பேரூராட்சி தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் திரு சின்னப்பராஜ் அவர்கள் திரு எடிசன் பெர்னாட் அவர்கள் குறுவள மைய தலைமையாசிரியர்கள் , வட்டார மேற்பார்வையாளர் பொறுப்பு ஜெயந்தி அவர்கள் IE ஒருங்கிணைப்பாளர் அவர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் கல்வி மேலாண்மை குழு துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 17 அன்று இணைவோம் மகிழ்வோம் நவம்பர் 22 ஆம் நாளன்று கலை நிகழ்வு காகித பறவை டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று சைகை மொழியில்தமிழ் தாய் வாழ்த்து மற்றும் சிறார் திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிட பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 17 அன்று இணைவோம் மகிழ்வோம் நவம்பர் 22 ஆம் நாளன்று கலை நிகழ்வு காகித பறவை டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று சைகை மொழியில்தமிழ் தாய் வாழ்த்து மற்றும் சிறார் திரைப்படம் அனைத்து பள்ளிகளிலும் திரையிட பட உள்ளது.
சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆனைமலை IE வள மையங்களில் நடைபெற உள்ளது.

Share to your friends.

You missed