கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம், கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில், B.E., மற்றும் B.Tech., முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கான ORIENTATION PROGRAMME கல்லூரி நிறுவனத் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி தலைமையில், துணைத் தலைவர் இந்து முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் IPS, இன்போசிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு தலைவர் மற்றும் AVP ஜெ.சுஜித்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவியரிடம் , புதிய புதிய விஷயங்களை மாணவ மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும், லட்சியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு கலையை தேர்ந்தெடுத்து அதில் முழு கவனம் செலுத்தி, இலட்சியத்தை அடைய முழு கவனத்தை செலுத்துங்கள். லட்சியத்தை அடைய உடல் வலிமை மிகவும் முக்கியம், அது தான் மன வலிமைக்கு வழி வகுக்கும். தொழில்நுட்பம் எப்போதும் நடுநிலையானது செல்போனை நம் வாழ்க்கையின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள், சமூக ஊடகங்களில் நேரத்தை வீணாக செலவிடுவதை தவிர்த்திடுங்கள், மாணவ மாணவிகள் எப்போதும் புத்தக புழுவாக இருக்காமல் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். பொறியியல் படிப்பில் அனைத்து துறைகளுமே முக்கியத்துவம் வாய்ந்தது, அதற்கு தகுந்தவாறு நமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். படிப்புடன் மாணவ மாணவியர் விளையாட்டு துறைகளிலும் பங்கெடுத்து தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் அனைத்தையும் விட மாணவ மாணவியர் மிகவும் முக்கியமாக மனதில் பதித்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த நிலைமைக்கு நம்மை ஆளாக்கிய பெற்றோர்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்களது பெயரை காப்பாற்ற, கனவுகளை
நனவாக்க, இளம் பருவத்தில் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் சிந்தனைகளை சிதறவிடாமல் நல்ல ஒழுக்கத்துடன் படிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்தி வாழ்க்கையில் பல வெற்றிப் படிகளை அடைய வேண்டும் என அறிவுரையை வழங்கினார்கள்.. நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் முனைவர் ரமேஷ் மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியரகள் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்…

Share to your friends.

You missed