நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதிக்கு உட்பட்ட மங்களபுரம் பேருந்து நிறுத்தத்தில் பிஜேபி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றை அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்னிருத்தப்பட்டது. இதில்
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் ஒன்றிய தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும் சிறப்பு விருந்தினர்
லோகேந்திரன் மாநில நலத்திட்ட துணைத் தலைவர் கலந்து கொண்டார்.தவிர இதில் மாநில எஸ் டி பிரிவு செயலாளர் வேலு ,நாமக்கல் கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் காளியப்பன்ஒன்றிய பொதுச் செயலாளர்கள்
பிரகாசம்,அசோக் குமார் மற்றும்ஒன்றிய துணைத் தலைவர்கள்கண்ணன்,
செல்வகுமார்,கோவிந்தராஜ்,
பழனிவேல்,சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.தவிர இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்…

Share to your friends.

You missed