கோவை நவம்பர் 4-

தைவான் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, கோவை மாவட்டத்தில், பசுமை தொழில் வளர்ச்சியை உருவாக்கும் வகையில் தைவான் நாட்டு தொழில் அமைப்பினருடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

கோவை இந்திய தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில், இன்று தைவான் நாட்டு தொழில் அமைப்பினர்கள் மற்றும் மத்திய அரசின் தேசிய உற்பத்தி கவுன்சில் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது தேசிய உற்பத்தி குழு இயக்குனர் சந்திப்பு குமார் நாயக் ஐஏஎஸ் மற்றும், இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ஸ்ரீ ராமுலு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக, கோவை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தைவான் நாட்டு தொழில்நுட்பத்தின் மூலமாக, பசுமை தொழில் வளர்ச்சியை மேற்கொள்ள தேசிய உற்பத்தி குழு மூலமாக அமையும் என்றும், பசுமை தொழில்புரட்சி, மாசு கட்டுப்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மின்சார வாகனங்கள் பயன்பாடு, சாப்ட்வேர் கிளவுட் தொழில்நுட்பம், பருவ கால மாற்றம், உள்ளிட்ட துறைகளின் நிபுணத்துவம், வாய்த்த தொழில் நுட்பங்கள், கோவை மாவடத்த்திற்க்கு கிடைக்க உள்ளது, .

தைவான் நாட்டு உற்பத்திகுழு இயக்குனர் ஷெர்லின் லின் தலைமையிலான 8 போர் கொண்ட வல்லுனர் குழு முன்னிலையில். நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சியில் சைமா மற்றும் பல்வேறு தொழில் அமைப்புகள் கலந்து கொண்டனர் வர்த்தக சபை நிர்வாகிகள் அண்ணாமலை .சுந்தரம் மற்றும்
கோவையை சார்த்த பல்வேறு தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்,

Share to your friends.

You missed