
தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் 15 /10/ 2022 காலை 9.30 மணிக்கு மனிதத்தை மறக்காத மாமனிதர், இந்திய தாய் திருநாட்டின் 11 வது குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 92 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு மன்ற தலைவர் டாக்டர் மா. சிவக்குமார் தலைமையேற்று கலாம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் கவுன்சிலர் டி.ஏ. சிவா,மனிதநேய விருத்தாளர் சி. சைனி சிவகுமார், சி. நிவேதா, டி .ஏ. சந்திரமோகன், மோகன்ராஜ், பா. வின்சி, புத்தூர் துரை, எஸ். பார்த்திபன், எஸ். சஞ்சய், தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.