கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கைலாஷ் இவரின் மனைவி பேபிதேவி (23). நிறைமதா கர்ப்பிணியான இவருக்கு இன்று இரவு வீட்டில் இருக்கும்பொழுது பணிக்குடம் உடைந்து இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார் இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரசவ வலி அதிகரித்து குழைந்தையின் தலை வெளியே வந்தது இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முருகன் அவருடைய வீட்டிலேயே பைலட் பாண்டி உதவியுடன் பிரசவம் பார்த்தார் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது இதையாடுத்து சோமனுர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாய் சேய் இருவரையும் சேர்த்தனர் அவரை பரிசோதனை செய்த டாக்டர் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார் அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அப் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரித்தனார்.

Share to your friends.

You missed