கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் போதி வளாகப் பள்ளியில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய ‘வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி’ அறிவியல் கண்காட்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ஈஸ்வர் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் திருமதி நித்யா பிரபு அவர்களும், எம் ஏ கே குழுமத்தின் நிறுவனர் மாணிக்கம் அத்தப்பா அவர்களும் பங்கேற்றனர். மேலும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரி பூபதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இதில் வேலம்மாள் போதி வளாகப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ பிரணவ் இளையவர் பிரிவில் முதல் பரிசும், ரோகன், தருன் மூத்தோர் பிரிவில் இரண்டாம் பரிசும், மோகித் சிறப்பு பரிசும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இந்த அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியை வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் முத்துராமலிங்கர் மற்றும் இயக்குனர் சசிகுமார், பள்ளி முதல்வர் ரேவதி மற்றும் ஆசிரியர்கள் மிகச் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

Share to your friends.