கோயம்பத்தூர், ஆகஸ்ட் 19, 2022 – கோவை இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிட வளாகத்தில் விஜயா பதிப்பகத்தின் சார்பில் ராஷித் கஸ்ஸாலி அவர்கள் எழுதிய வள்ளுவ மெய்யறிவு என்ற புதிய தலைமுறையினருக்னான அறம்சார் கல்வி நூல் வெளியீட்டு விழா 19.08.2022 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. 

விழாவிற்கு வந்திருந்தவர்களை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் திரு. விஜயா மு வேலாயுதம் வரவேற்று பத்தகத்தை பற்றி விளக்கி பேசும்போது :- இந்த புத்தகத்தின் நூல் ஆசிரியர் திரு. ராஷித் கஸ்ஸாலி அவர்களின் என்னப்படி இந்த நூல் மூலம் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தங்களது கல்லூரி படிப்பை முடித்துச் செல்லும் போது குறைந்தபட்சம் 50 அல்லது 60 திருக்குரள்களையும் அதன் அர்த்தங்களையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஒரு முயற்சியாக வெளியிடப்பட்டுள்ளது. திரு. ராஷித் கஸ்ஸாலி பெரு நிறுவனங்களின் ஆலோசகராகவும், வாழ்வியல் வழிகாட்டியாகவும், பெருங்கல்வியாளராகவும் திகழ்கிறார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். 

அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய அயராத உழைப்பினால் மதிப்புறு உயர்வுகளை அடைந்தவர். பட்டப் படிப்புக் கற்றுக்கொண்டிருந்த போதே இவர் தொடங்கிய சைன் என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு இவரது வெற்றிச் சாதனைகளின் வரிசையில் முதற்படியாக அமைந்தது. 

ஒரு வாழ்வியல் வழிகாட்டியாகவம் செயல்திட்ட ஆலோசகராகவும் உலகெங்கும் பல நாடுகளுக்கு பயணித்து ஆயிரக்கனக்கான சுயமுன்னேற்ற அமர்வுகளையும், பெருநிறுவனங்களுக்கான பயிலரங்குகளையும் நடத்தியிருப்பதோடு ஆத்மிக உரைகளையும் நிகழ்த்தி வருகிறார். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண் இயக்குனராகச் சீரிய முறையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். 

2019-ல் நடந்த உலகளாவிய தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வில் பங்குபெற்று உரையாற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசால் ராஷித் கஸ்ஸாலி அழைக்ப்பட்டுள்ளார். மானுட சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற இவரது இலட்சிய தாகமும், மனித வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக இவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் இவரைத் தனித்து அடையாளப்படுத்துகின்றன. 

இவர் தமிழக அரசினால் நியமனம் செய்யப்பட்ட பாராதியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. என்று பேசினார். 

புத்தகத்தை கோயம்புத்தூர், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜி. எஸ். சமீரன் அவர்கள் வெளியிட கோயம்புத்தூர், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு. எம். எஸ். முத்துசாமி மற்றும் கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் பி. காளிராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவில் கோயம்புத்தூர், ரூட்ஸ் குழுமங்களின் இயக்குனர், சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன் சிறப்புரையாற்றினார். 

இந்த புத்தகத்தின் தமிழாக்கத்தை விஜயா பதிப்பகமும் மலையாள புத்தகத்தை ஓலிவ் பதிப்பகமும் வெளியிட்டுள்ளது. 

விழாவில் கோயம்புத்தூர் ஏஜெகே கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளரும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆட்சிக்குழு மன்ற உறுப்பினரும், தமிழ்நாடு தனியார் சுய நிதி கலை மற்றும் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகளின் மாநில தலைவருமான முனைவர் அஜித் குமார் லால் மோகன் மற்றும் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை தலைவர் பேராசியரியர் முனைவர் சித்ரா ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.

விழா முடிவில் மனோஜ் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

Share to your friends.

You missed