கோவை சரவணம்பட்டி ப்ரோஜோன் மாலில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இது குறித்து புரோஜோன் மால் தலைவர் அம்ரிக் பனேஸர், மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலியக்க தலைவர் முசாமில் ஐ, செயலியக்கம் மற்றும் சந்தை பிரிவு தலைவர் சி.முரளி ஆகியோர் கூறியதாவது :- இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 12 முதல் 15 வரை சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிக பட்சமாக 75 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உள்ளது. மேலும் ரூபாய் 5,999-க்கு பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு ரூபாய் 500 கான சிறப்பு உணவு கூப்பன் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

மேலும் 12 ஆகஸ்ட் 2022 அன்று குழந்தைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், 13 அன்று விஜய் டிவி குக்வித்து கோமாளி புகழ் திரு பாலா அவர்களின் கலை நிகழ்ச்சிகளும், 14 அன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர் மற்றும் பின்னணி பாடகர் திரு சாம் விஷால் அவர்களின் இசை நிகழ்ச்சியும், 15 அன்று குழந்தைகளுக்கு விளையாட்டு மற்றும் போட்டிகளும் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு ப்ரோசோன் மாலின் சேமிப்புக்கான சுதந்திர விழா கால சலுகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு ப்ரோசோன் மால் நிர்வாகம் அழைக்கிறது.

Share to your friends.