கோவை: ஆகஸ்டு 05;

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐடிஐ எனப்படும், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் 60 ஆண்டுகளை கடந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்ட தொழில் கல்விகளை கற்றுக் கொடுத்து, வருடத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை தொழில் முனைவோர்களாகவும், முன்னணி நிறுவனங்களில் பணி அமர்த்தியும் வருகிறது. மேலும், பல ஆயிரம் பேரை மத்திய,மாநில அரசு பணிகளிலும் பணி அமர்த்தி அழகு பார்த்து வருகிறது. ஐடிஐ எனப்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். இது போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் வளர்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முன்னாள் மாணவர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். முன்னாள் அரசினர் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் கட்டாயம் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசினர் தொழிற்பயிற்சி நிலைய உதவி இயக்குனர் லீமாரோஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தை முன் நின்று நடத்துவதற்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் முத்துக்குமார், அமைப்புச் செயலாளர் பிரசாத், துணைச் செயலாளர் உதயகுமார், கௌரவ தலைவர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் குணசேகரன், துணைத் தலைவர் குணசேகரன், நெறியாளர் சித்தி விநாயகம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Share to your friends.