கடந்த ஜூலை மாதம் 30 மற்றும் 31- ம் தேதிகளில் 6வது சர்வதேச கராத்தே போட்டியானது மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது, இதில் தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், இலங்கை, நேபாளம், இந்தியா உட்பட்ட நாடுகளிலிருந்து 2000 போட்டியாளர்களுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநிலம் சார்பாக கோவை மாவட்ட ஜி தோக்கு காய் கராத்தே பள்ளி, டைகர் கராத்தே அகாடமியின் மாணவர்கள் கலந்து கொண்டு, 17 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தனர். இப்போட்டியில் தமிழ்நாடு மாநில தலைமைப் பயிற்சியாளராக சென்ஸெய் ம.சிவசண்முகம் தலைமையேற்று வழிநடத்தினார். போட்டியில் நடுவர்களாக கோவையை சேர்ந்த சென்ஸெய்.ரமேஷ் அரவிந்த் மற்றும் சென்ஸெய்.ஹரிபாபு ஆகியோரும், பயிற்சியாளராக சஞ்சய் குமாரும் பங்கேற்றனர்.

போட்டியில் வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகள் ஆகியோரை தமிழ்நாடு கராத்தே சங்க நிர்வாக செயலாளரும், கோவை மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைவருமான சென்ஸெய். முத்துராஜு ஆகியோர் வாழ்த்தினார்கள்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:

அர்ஜுன்
8 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கட்டா பிரிவில் வெண்கலம்,

மிருதியுஞ்சா:
9 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கட்டா பிரிவில் தங்கம், சண்டை பிரிவில் தங்கம்.

ஜோஷிதா:
9 வயதிற்கு உட்பட்ட பெண்கள் 30 கிலோ கட்டா பிரிவில் தங்கம், சண்டை பிரிவில் தங்கம்.

நந்தனா ஶ்ரீ:
10 வயது பெண்கள் கட்டா பிரிவில் வெள்ளி, சண்டை பிரிவில் வெள்ளி.

தரணீஷ்:
10 வயது ஆண்கள் கட்டா பிரிவில் தங்கம், சண்டை பிரிவில் வெண்கலம்.

ஹரிஷ்:
11 வயது ஆண்கள் கட்டா பிரிவில் வெண்கலம்.

பிரஹர்ஷித்தா:
12 வயது பெண்கள் கட்டா பிரிவில் தங்கம், சண்டை பிரிவில் வெள்ளி.

லக்ஷித்தா:
13 வயது பெண்கள் கட்டா பிரிவில் வெண்கலம், சண்டை பிரிவில் வெள்ளி.

கணிஷ்க்:
13 வயது ஆண்கள் கட்டா பிரிவில் வெள்ளி , சண்டை பிரிவில் தங்கம்.

லீ ஶ்ரீ சாம்ராட்:
14-15 வயது ஆண்கள் கட்டா பிரிவில் தங்கம், 45 கிலோ சண்டை பிரிவில் வெள்ளி.

அஸ்வத்:
14-15 வயது ஆண்கள் 60 கிலோ எடை கட்டா பிரிவு தங்கம், சண்டை பிரிவில் தங்கம்.

கனிகா :
14-15 வயது பெண்கள் 50 கிலோ எடை பிரிவு கட்டா வெண்கலம், சண்டை பிரிவு தங்கம்.

ரிஷி:
14-15 வயது ஆண்கள் 64 கிலோ எடை கட்டா பிரிவு தங்கம், சண்டை பிரிவு தங்கம்.

திவ்யதர்ஷினி:
14-15 வயது 58 கிலோ எடை கட்டா பிரிவு வெண்கலம், சண்டை பிரிவு தங்கம்.

கிருத்திகா:
16-17 வயது பெண்கள் 55 கிலோ எடை கட்டா பிரிவு தங்கம், சண்டை பிரிவு வெள்ளி.

மானுஷா தேவி:
16-17 வயது பெண்கள் 50 கிலோ எடை கட்டா வெண்கலம், சண்டை பிரிவு வெள்ளி.

ஜெய் ஹரி:
16-17 வயது ஆண்கள் 84 கிலோ எடை சண்டை பிரிவு வெள்ளி.

இலக்கியா:
18 வயது பெண்கள் கட்டா பிரிவு வெண்கலம், சண்டை பிரிவு வெண்கலம்.

ஹரிபாபு:
18 வயது ஆண்கள் 60 கிலோ எடை சண்டை பிரிவு வெண்கலம்.

சஞ்ஜய் குமார்:
18 வயது ஆண்கள் 67 கிலோ எடை கட்டா பிரிவு தங்கம், சண்டை பிரிவு தங்கம்.

Share to your friends.