கோவை: ஆகஸ்ட் 02;

கோவை மாநகராட்சியில் அதிகாலையில் பணிக்குச் சென்ற தூய்மை பணியாளர் மரணத்திற்கு நீதி வேண்டி கோவை அரசு மருத்துவமனை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது..

இன்று காலை 5.45மணிக்கு கோவை மாநகராட்சி 42வது வட்டத்தில் பணிபுரியும் ரங்கநாதன் எனும் பணியாளர் கோவை ஒண்டிபுதூர் பட்டணம் புதூரில் இருந்து காலை 5.45 மணிக்கு பணிக்கு செல்லும் வழியில் காமாட்சிபுரம் காவல் சோதனைச் சாவடி அருகில் அதிவேகமாக வந்த லாரி மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார், அதோடு மட்டுமல்லாமல் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த குப்பைகளை சேகரித்துக் கொண்டிருந்த இருகூர் தூய்மை பணியாளர்கள் மீதும் டிராக்டர் மீது மோதி 5 பேர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரிந்து காலை 7 மணி முதல் கோவை அரசு மருத்துவமனை முன்பாக சமூக நீதி தொழிற்சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது, அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் காலை ஐந்தே முக்கால் மணி வேலை நேரம் என்பதால் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் பணிக்கு செல்லும் பொழுது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் வேலை நேரத்தை காலை 7:00 மணிக்கு மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தியோடு விபத்தில் மரணம் அடைந்த தூய்மை தொழிலாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் பலத்த காயம் அடைந்த இருகூர் பேரூராட்சி பணியாளர்கள் வினோத் குமார், திருமூர்த்தி, முனியப்பன்,முருகன்,
ராஜ்குமார் ஆகியோருக்கு ரூ 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகையும், மரணம் அடைந்த குடும்பத்தார் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமூக நீதி தொழிற்சங்கம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது போராட்டத்தில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்

Share to your friends.