கோவை;ஜூலை 31;

பப்பூவா நியூகினியா நாட்டின் வர்த்தக ஆணையர் டாக்டர் விஷ்ணு பிரபு அவர்கள் இந்திய நாட்டின் 15 – வது குடியரசு தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களை மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து தமிழக பாரம்பரியம் மற்றும்  கலாச்சாரம் என்ற புத்தகத்தையும் வழங்கினார்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் பிரத்யேக முறையில் தயாரிக்கும் எம்பிராய்டரி சால்வை ஒன்றையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு பரிசாக கொடுத்தார்.

கோவையை சேர்ந்த டாக்டர் விஷ்ணு பிரபு என்பவர் திமுக பிரமுகராக இருந்தாலும் கூட அடிப்படையில் இவர் ஒரு தொழிலதிபர். அந்த வகையில் அதில் கிடைத்த உயர்மட்ட தொடர்புகள் மூலம் பப்புவா நியூ கினியா நாட்டின், இந்தியாவுக்கான வர்த்தக ஆணையராக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு அரசால் நியமிக்கப்பட்டார். இதனால் பப்புவா நியூ கினியா நாட்டின் வர்த்தக ஆணையர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை பகிர்ந்தார்

இதில் குறிப்பிட வேண்டிய விஷேசம் என்னவென்றால் பப்புவா நியூ கினியாவை பொறுத்தவரை பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு என்பது தான். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்பின் போது குடியரசுத் தலைவருக்கு உலகப்புகழ் பெற்ற ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்களை பரிசளித்திருக்கிறார் விஷ்ணு பிரபு.

நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியமிக்க தோடர் சமுதாயத்தினர் தயாரிக்கும் பூ வேலைப்பாடுகளுடன் கூடிய சால்வை ஒன்றும் குடியரசுத் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. சுமார் 5 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பப்புவா நியூ கினியா நாட்டுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டிருக்கிறது.

Share to your friends.