நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பாக இருப்பது கல்லீரல் ஆகும். கல்லீரல் இன்றி நம்மால் வாழ முடியாது என்றுள்ள நிலையில்,கோவையில் கல்லீரல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. கே.எம்.சி.எச்.மருத்துவமனை சார்பாக ஆரோக்கியமான கல்லீரல் மகிழ்ச்சியான வாழ்க்கை எனும் தலைப்பில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்சியில் மருத்திவமனையின் செயல் இயக்குனர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்தார்.பேரணியை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசினார்..ரேஸ்கோர்ஸ் சி.எஸ்.ஐ.பள்ளியில் துவங்கிய பேரணியில் கலந்து கொண்டோர் ரேஸ்கோர்ஸை சுற்றி நடைபயணம் செய்தனர்.இதில், கல்லீரல் நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நோய் வராமல் தற்காத்துக் கொள்வது குறித்த காலத்தில் இது சேர்த்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி பேரணியாக சென்றனர்.பேரணியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் பாரி விஜயராகவன் உட்பட கல்லீரல் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Share to your friends.