கோவை , ஜூலை 31

கோவை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி ஒக்கிலிபாளையத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோயிலில், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் 100 மரக்கன்றுகள் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி ராஜசேகர், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர் சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள், மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்க நிர்வாகிகள் அண்ணாமலை, நிரஞ்சன், அரவிந்த், கவுரி, சுதர்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேவரிக் அப்துல் கலாம் இளம் தலைவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.

Share to your friends.