அவினாசி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் தர்மா (வயது 35). இவர் கட்டிட சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். பின்னர் நேற்று திரும்பிவந்து பார்க்கையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதே போல் அவினாசி நியூடவுன் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன்(30) .ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 27-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டு நேற்று திரும்பிவந்து பார்த்துள்ளார்.

வீட்டு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1/2 பவுன் கம்மல் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share to your friends.