சென்னை:தேசிய விருது பெற மாற்றுத் திறனாளிகள்நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம்வழங்கும் அமைச்சகம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

மொத்தம் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. விருது பெறுவோருக்கு பதக்கம் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒரு லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விருது தொடர்பான விபரங்களை www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

அந்த இணையதளத்திலும் www.awards.gov.inஎன்ற இணையதளத்திலும் நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஆக.28க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Share to your friends.