இன்று ஜுலை 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது

கோயம்புத்தூர், ஜுலை 29, 2022 – கோயம்புத்தூர் கிரெடாய் அமைப்பு நடத்தும் ஃபோர்புரோ மெகா ரியல் எஸ்டேட் கண்காட்சி, இன்று துவங்கியது. இதில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், வீடு வாங்குவோர் மற்றும் வங்கியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. வீடு வாங்க விருப்பம் உள்ள ஒவ்வொருவரும் தமது பட்ஜெட், இருப்பிடம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனக்கேற்ற கனவு இல்லத்தை இதில் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் வீடு அல்லது வீட்டு மனைக்கு உடனடிக் கடன் வசதி அளிக்க பாரத ஸ்டேட் பேங்க் மற்றும் இதர வங்கிகள் தங்களது ஸ்டால்களை அமைத்துள்ளன. இந்தக் கண்காட்சிக்கு ஒவ்வொரு வருடமும் மக்களிடையே பெரும் வரவேற்பு அதிகாத்துக்கொண்டு உள்ளது.

இக்கண்காட்சிக்கு வந்திருந்தவர்களை கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ வரவேற்று பேசுகையில் :- கோவை கிரெடாய் சார்பில் 12வது முறையாக கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியை கொடிசியா வளாகத்தில் நாங்கள் இன்று துவக்கியுள்ளோம். ஜுலை 29 முதல் 31-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், 75-க்கும் மேற்பட்ட ரெரா அங்கீகாரம் பெற்ற புராஜெக்ட்களை காட்சிப்படுத்துகின்றனர்.
மேலும் இக்கண்காட்சியல் 6 வங்கிகள் மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையாளர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பகள் முதல் ஹாலிடே வில்லாக்கள், கேட்டட் கம்யூனிட்டிகள், வீட்டு மனைகள் மற்றும் முதியோருக்கான இல்லங்கள் வரை இக்கண்காட்சியில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ள புராஜெக்டுகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் புராஜெக்;ட்டுகளும் உள்ளன.

சமீப காலங்களில் அதிக சொகுசு கொண்ட வீடுகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கும் வீட்டு மனைகளுக்கும் அதிக அளவு வரவேற்பு உள்ளது. வீட்டிலிருந்தே ஐடி கம்பெனி பணியாளர்கள் பணி புரிவதால் அவர்கள் பெரிய அளவிளான வீடுகளை எதிர்பார்க்கின்றனர். சற்று தொலைவில்இருந்தாலும் மக்கள் அதிக போக்குவரத்து வசதி கொண்டுள்ள இடங்களை பெரிதும் விரும்புகின்றனர். வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் சில ஆண்டுகளாகக் குறைந்துள்ளதால் மேலும் பலர் வீடு வாங்குவதற்கு முன்வருகின்றனர். கட்டுமானத்தின் செலவு அதிகரித்திருந்தாலும் சொத்து வாங்குவதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

மேலும் பல முதலீட்டார்கள் ரியல் எஸ்டேட் துறையில், குறிப்பாக சிறிய நகரங்களில் அதிக லாபம் உள்ளதால், வணிகக் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் முதலீடு செய்ய முன்வருகின்றனர். மேற்படி காரணங்களால் நமது பகுதியில் ரியல் எஸ்டேட் துறை பெறும் வளர்ச்சி கண்டு வருகிறது.

கிரெடாய் ஃபேர்புரோ கண்காட்சியானது வீடு வாங்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்கள் முதல், வங்கிக் கடனும் ஆலோசனையும் ஒரே இடத்தில் அளித்து பல மக்களின் கனவு இல்லத்தை நனவாக்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி இந்த கண்காட்சியின் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளது என்றார்.

இன்று துவங்கிய கண்காட்சியை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் முதுநிலை பொது மேலாளர் திரு. ஆர். ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்து பேசும் போது :- ஒவ்வொருவருக்கும் அவசிய தேவையாக உள்ள வீடு வாங்குவதில் ரியல் எஸ்டேட் துறையும் நிதி துறையும் மிகவும் அவசியமானதாக உள்ளது. இருவருக்கும் பொதுவான வாடிக்கையாளராக உள்ள பொதுமக்களுக்கு, ஒரு சந்திப்பை ஏற்படுத்துவதில் இத்தகைய கண்காட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில், மருத்துவம், கல்வி என வளர்ச்சி பெற்று வரும் கோவை நகரில், கட்டமைப்புகளின் வளர்ச்சியும் வெகுவாக உயர்ந்து வருகிறது. மக்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. மூன்றாம் நிலை நகரங்களும் இரண்டாம் நிலைக்கு உயர்ந்து வருகின்றன. என்றார்.

விழாவில் கிரெடாய் தேசிய அமைப்பின் தென் மண்டல துணைத் தலைவர் திரு. ஜி. ராம் ரெட்டி பேசியதாவது :- பிற முதலீடுகளை விட மக்களை ஈர்க்கும் முதலீடாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. நிலத்தில் முதலீடு செய்வது எப்போதும் வீண் போவது இல்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் முதலீடு செய்வது மிகச்சிறந்த தருணமாக உள்ளது. தற்போது செய்யப்படும் முதலீடு இன்னும் ஐந்து ஆண்டுகளில் நல்ல வருவாயை தருவதாக இருக்கும். நாடு முழுவதும் ஒவ்வொரு நகருக்கும் ஒவ்வொரு மதிப்பீடுகள் உள்ளன. கோவையிலும் பல தொழில்கள் வளர்ச்சி பெற இருப்பதால் இந்த நகரம் ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். தற்போதுள்ள நிலையில் கோவையின் நில மதிப்பீடு குறைவாகவே உள்ளது என்றே கூறலாம்.

தமிழ்நாட்டிலும் பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதால் ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் நன்றாகவே இருக்கும். வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்புகளை தரும் தொழில்களில் ஒன்றாக கட்டுமானத் தொழில் உள்ளது. இவ்வாறு கிரெடாய் தேசிய அமைப்பின் தென் மண்டல துணைத் தலைவர் ராம் ரெட்டி பேசினார்.

கிரெடாய் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் திரு. சுரேஷ் கிருஷ்ன் விழாவில் கலந்து கொண்டார்.

விழா முடிவில் கிரெடாய் செயலளார் ராஜீவ் ராமசாமி நன்றி கூறினார்.


Share to your friends.