பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக காணொலி வாயிலாக ஒன்பது பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ல் பல பெண்களை பலாத்காரம் செய்து ‘வீடியோ’ எடுத்து துன்புறுத்திய வழக்கின் விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு 25 சபரிராஜன் 25 சதீஷ் 28 உட்பட ஒன்பது பேர் சேலம் சிறையிலிருந்தபடி காணொலி வாயிலாக மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டார்.

Share to your friends.