
மாநகராட்சி பகுதிகளில் ‘மாஸ்க்’ அணியாதவர்களிடம் இருந்து, 6,700 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர், மால்கள் உள்ளிட்ட இடங்களில் ‘மாஸ்க்’ அணியாதவரிடம் இருந்து, 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில், நேற்று மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து, 6,700 ரூபாய் அபராதம் வசூலித்து, மாநகராட்சி சுகாதார பிரிவினர், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.