காற்றாலைகளில் இருந்து முதல் முறையாக, மின் வாரியம் நேற்று முன்தினம், 5,535 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு நிறுவனங்கள், 8,618 மெகா வாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன.

ஆண்டுதோறும் மே முதல் செப்., வரை காற்றாலை சீசன்.கடந்த 2020 ஆக.,7ல் காற்றாலைகளில் இருந்து, 5,129 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே, ஒரே நாளில் காற்றாலைகளில் இருந்து, வாரியம் கொள்முதல் செய்த அதிக அளவாக இருந்தது.

நடப்பு சீசனில் காற்று நன்கு வீசுவதால், காற்றாலைகளில் இருந்து தினமும் சராசரியாக, 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைக்கிறது.காற்றாலைகளில் இருந்து எப்போதும் இல்லாத வகையில்,

ஜூன் 26 முதல் அதிக அளவாக, 5,239 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. அதைவிட அதிகமாக, நேற்று முன்தினம், 5,535 மெகா வாட் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்து, மின் வாரியம் சாதனை படைத்துள்ளது.

Share to your friends.