பள்ளிக் கல்வித் துறையில், முதன்மை கல்வி அலுவலகங்களில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி கமிஷனரகம் பிறப்பித்த உத்தரவு:அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சி.இ.ஓ.,வான முதன்மை கல்வி அலுவலகர்களின் அலுவலக செயல்பாடுகளை இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக, வரும் 31ம் தேதிக்குள், கமிஷனரகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.அனைத்து ஆவணங்களையும், முழுமையாக தயார் நிலையில் வைக்க வேண்டும்.

பணி ஒதுக்கீட்டு பட்டியல் மற்றும் பணியாளர் விபரங்களை ஆய்வு செய்வதோடு, உரிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பள்ளிகளில் சி.இ.ஓ.,க்கள் ஆய்வு நடத்திய விபரங்களை சரிபார்க்க வேண்டும். அலுவலக தளவாட பொருட்களின் இருப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை பதிவேடு, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உயர்கல்விக்கான ஊதிய பதிவேடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, பல்வேறு வகை ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Share to your friends.