கோவை,ஜூலை 01;

வேளாண் கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்துறையில் பல புரட்சிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பிகளை நினைவு கூறும் வகையிலும், பல்கலைக்கழகத்தின் சாதனைகளை அங்கீகரிக்கவும், காலம் வயது வரம்பின்றி அறிவியல் சார்ந்த வேளாண் கல்வியை கற்ற ஆர்வர்களுக்கு பட்டமளிப்பும், நிறுவன நாள் மற்றும் தொலைநிலை கல்வி பட்ட தகுதி பெரும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் முன்னாள் பொது இயக்குனர் மற்றும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டத்தில் ஆலோசராக பணியாற்றும் முனைவர். லட்சுமணன் சிங் ரத்தோர் அவர்கள் நிறுவன நாள் உரையாற்றி, சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். 116 ஆண்டுகால பாரம்பரியமிக்க நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களும், மூத்த அறிஞர்களும் எடுத்துரைத்தனர். கோயம்புத்தூர் மாநகரத்தின் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். வேளாண் கல்வி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் பல மிகப்பெரிய சாதனைகளை புரிந்த வேளாண் அறிஞர்களுக்கு விருதுகளும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் பயின்ற பட்டதாரிகளுக்கு பட்ட சான்றுகளும் வழங்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழகத்திற்காக பல்லாண்டு கால சேவை புரிந்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் மூத்தவர்களும், பெரியோர்களும் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் முதலாக தமிழ்நாடு வேளாண்மை கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி அவர்கள் பங்கேற்பாளர்களை வரவேற்று பல்கலைக்கழகத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி உரையாற்றினார். விழாவில் இறுதியாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் தமிழ் வேந்தன் நன்றியுரை வழங்கினார்.

Share to your friends.