கோவை: ஜூன் 21;

கோவை கே. பி. ஆர். பெண் தொழிலாளர்கள் கல்விப் பிரிவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுள்ளனர். இவர்களுள் 12ம் வகுப்பில் பயின்ற 116மாணவிகளில், நான்கு மாணவிகள் 600 மதிப்பெண்களுக்கு 500க்கும் மேல் பெற்று கே. பி. ஆர் பெண் தொழிலாளர்கள் கல்விப்பிரிவு சாதனை மாணவிகள் பட்டியலில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இவர்களுள் செல்வி. பி. ஆனந்தலட்சுமி என்ற மாணவி 571 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர்கள் முழுநேரம் மில்லில் பணிபுரிந்து கொண்டே, மாலைநேர வகுப்பில் படித்து கடின உழைப்பையே மூலதனமாகக் கொண்டு இச்சாதனையைப் புரிந்துள்ளார்கள். இவர்களுடைய கல்விச் சாதனைகளை கே.பி.ஆர்.குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர். கே. பி. ராமசாமி அவர்கள் மனமுவந்து பாராட்டினார். இம்மாணவிகளைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய எதிர்கால வாழ்வில் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுடைய மேற்படிப்பைத் தொடர்வதற்கான கே பி ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் மேற்படிப்பை தொடர்வதற்கு முழு கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களை ஊக்குவித்து உள்ளார் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
