கோவை: ஜூன் 20,

கோவையை தலைமையிடமாக கொண்டு கடந்த பத்து வருடங்களாக ‘ரெட் டாக்ஸி’ மற்றும் ‘கோ டாக்ஸி’ என்ற பெயரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்டாக்ஸி களை தினந்தோறும் இயக்கி வருகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த கால் டாக்சிகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் ரெட் டாக்ஸி ஓட்டுனர்களை நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனர் சங்கத்தினர் சிலர் உங்கள் கால் டாக்சிகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடாது என்றும், கால் டாக்ஸி ஓட்டுனர்களை தகாத வார்த்தைகளால் திட்டியும் டயர்களை கிழித்தும் வாகனங்களை சேதப்படுத்தியும் வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட ரெட் டாக்ஸி ஓட்டுனர்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியும்,நீலகிரி மாவட்ட ஓட்டுநர்களை மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கோவையிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கால் டாக்சிகளை எந்தவித அச்சுறுத்தலும் இன்றி சென்று வரவும் பாதுகாப்பு வழங்க கோரியும் கோரிக்கை மனு அளித்தனர்.

Share to your friends.