கோவை,: ஜூன் 7;

உலக புகையிலை ஒழிப்பு தினம்(மே 31)மற்றும் உலக சுற்றுச்சூழல் தினம்(ஜூன் 5) ஆகியவற்றை முன்னிட்டு தாய்மை அறக்கட்டளை சார்பாக நடத்திய (1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிளான) சிறுவர் சிறுமியர்களுக்கான “விழிப்புணர்வு ஓவிய போட்டி கோவை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேனிலை பள்ளியில் ஞாயிறு ஜூன் 5 அன்று நடைபெற்றது. காலை 9 மணி முதல் 1 மணிவரை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திருமதி சாந்தகுமாரி அவர்களும் (தலைமையாசிரியர், ஸ்ரீமதி பத்மாவதி அம்மாள் மெட்ரிக் பள்ளி), திரு மகேஸ்வரன் அவர்களும் (மக்கள் சேவை அமைப்பு), திரு வாடாப்பூ நாராயணன் அவர்கள் (ஸ்ரீ வாடாப்பூ ட்ரேடர்ஸ், சென்னை கேட் அரிசி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓவிய போட்டியில் புகையிலை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியங்கள் வரைய சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.ஓவியம் வரையும் முன்பு புகையிலை தீங்கு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் சிறுவர்களுக்கு விளக்கப்பட்டது. ஓவிய போட்டியின் நடுவர்களாக திரு ராஜகோபால் அவர்கள் (கலை சுடர்மணி விருது பெற்ற ஓவிய ஆசிரியர்(ஓய்வு), திருமதி சாரதா அவர்கள் (தாய்மை அறக்கட்டளை தலைமை அறங்காவலர்), திரு தெய்வீகன் (ஓவிய ஆசிரியர்) ஆகியோர் நடுவர்களாக நின்று அவர்கள் வரைந்த ஓவியங்களை தேர்வு செய்தார்கள்.

ஓவியம் வரையும் 1 மணி பொழுதில் பெற்றோர்களுக்கு குழந்தை வளர்க்கும் கலை, வளர்ப்பருவ மாற்றங்கள்,குழந்தை மனம் என்ற தலைப்பில் சிறப்பு பேச்சாளர்கள் திரு J. ஸ்ரீராம் ஆதித்தன் அவர்கள் (தலைவர், பேச்சு பட்டறை, கல்வியியல் பதிப்பாளர்) மற்றும் மன நல பயிற்சியாளர்கள் திருமதி எழில் மற்றும் பொன்மொழி ஆகியோர்கள் உரையாற்றினர்கள்.

பரிசளிப்பு நிகழ்வில் வெற்றிபெற்ற சிறுவர் சிறுமியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் அவர்களின் பள்ளி படிப்பிற்கு பயன்படும் வகையில் பரிசுகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
4 பிரிவுகளாகநடைபெற்ற ஓவிய போட்டியில் 102 குழந்தைகள் கலந்துகொண்டார்கள்.

Share to your friends.