ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வனநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச வன நாளை முன்னிட்டு வனம், பறவைகள், விலங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெறும்.

அந்த வகையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வனநாளை முன்னிட்டு போளுவாம்பட்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட சிறுவாணி மலை தொடரில் உள்ள பறவை இனங்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளின் புகைப்பட கண்காட்சி கோவை குற்றாலத்தில் நேற்று துவங்கியது.கோவை குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர். இதன் மூலம் சிறுவாணி மலை தொடரில் மட்டுமே இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்து பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கண்காட்சியானது நேற்றும் மற்றும் இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று பார்வையாளர்களை கவரும் விதமாக பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையோடு,இருளர் இன மலைவாழ் மக்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share to your friends.

You missed