கோவை சிங்காநல்லூர் அடுத்த ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த என்பவரின் மனைவி மல்லிகா (47). வெள்ளையன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மல்லிகாவுடன் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மல்லிகா சாணி பவுடர் குடித்து வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்க கொண்டு செல்ல முயன்ரணர். ஆனால் அவரை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மல்லிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share to your friends.