திருப்பூர் கோவில்வழி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக பார்க் ரோடு சாலையில் வந்து கொண்டிருந்த போது அவரின் இடது புறமாக வந்த அரசு பேருந்து திடீரென்று வலது புறமாக ( ஒரு வழிச்சாலையில் சென்றுள்ளது) இதில் பேருந்தின் பின் சக்கரத்தில் வாகனத்துடன் சிக்கிக்கொண்டார்.இதையடுத்து பொதுமக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அரசு பேருந்து நிறுத்தப்பட்டது. கார்த்தி சுதாரித்துக்கொண்டு லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த கார்த்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகனம் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் பேருந்தின் அடியிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த விபத்தின் காரணமாக பார்க் ரோடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் அரசுப் பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியத்தால், நீதிமன்ற ஊழியர், பனியன் தொழிலாளி , என 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Share to your friends.