கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் முகமதுரபீக் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார். இன்று அதிகாலை 1 மணிக்கு வீட்டிற்கு வந்த முகமது ரபீக் மகன் ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார் அப்போது வீட்டில் இருந்த முகமது ரபீக் குடிபோதையில் தனது மகன் ஷாஜகானை ஏன் இப்படி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முகமது ரபிக் வீட்டில் இருந்த காய் நறுக்கும் கத்தியை எடுத்து தனது மகன் ஷாஜகானின் இடது பக்க வயிற்றில் குத்தியும், முதுகின் பின்புறம் இரண்டு இடங்களில் கத்தியால் கீரியதில் கீழே விழுந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். உடனே முகமது ரபீக் தனது மனைவி உமேராவுடன் துடியலூர் காவல் நிலையம் வந்து சொன்னதின் பேரில் துடியலூர் உதவி ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் துடியலூர் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை செய்து ஷாஜகான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்பிரிவு விசாரணையில்
இறந்துபோன ஷாஜகான் என்பவருக்கு கோவை மாநகர காவல் நிலையத்தில்
குண்டாஸ் சட்டம் உட்பட பல்வேறு
வழக்குகள் உள்ளது தெரியவந்தது. அதிகாலையில் தந்தை மகனை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share to your friends.