கோவையில் பைனான்சியர் மற்றும் சலூன் கடை நடத்தி வரும் ஒருவர் நடுரோட்டில் வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம்புதூர் அம்மன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் சசிகுமார். இவர் அதே பகுதியில் பைனான்ஸ் மற்றும் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். சசிகுமாருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகுமார் அவரது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று ஞாயிற்று கிழமை வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு சசிக்குமார் தூங்கச் சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலிருந்து நடந்து வெளியே சென்றார். சிறிது தூரம் சென்ற பொழுது அங்கு இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும் சசிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கக்தி மற்றும் அரிவாளால் சசிகுமாரை சரமாரியாக வெட்டினர். இதில் சசிகுமாரின் தலை, கழுத்து, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. தப்பி ஓட முயன்ற சசிகுமாரை அந்த இருவரும் வெட்டி சாய்த்தனர். இதில் சம்பவ இடத்திலேயே சசிகுமார் ரத்தவெ ள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். சசிகுமாரின் சத்தம்கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு வருவதற்க்குள் சசிகுமாரை வெட்டிய மர்ம தப்பிச் சென்றனர். உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கே கிடந்த கத்தியை கைப்பற்றினர். தொடர்ந்து செல்வபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நகர துணைத் தலைவர் ராம்ஜி என்பவருக்கும் சசிகுமாருக்கும் இடையே பணம் கொடுக்கல் – வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த விரோதத்தில் ஆத்திரமடைந்த ராம்ஜி தனது நண்பர் இளங்கோவன் என்பவருடன் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தலைமறைவாக இருந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் அவரது நண்பர இளங்கோவன் ஆகியோரை கைது செய்தனர்.

Share to your friends.