கோவை, சூலூர் அருகே செலக்கரிச்சல் பகுதியில் போலீசார் முப்பத்தி ஏழு பாக்கெட்டுகளில் இருந்த 70 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக இருவரை கைது செய்தனர்.

கோவை, சூலூர் அருகே செலக்கரசல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் கும்பல் நடமாட்டம் பற்றிய ரகசிய தகவல் சுல்தான்பேட்டை போலீசாருக்கு கிடைத்தது. இது சம்பந்தமாக உடனடியாக அப்பகுதியில் சூலூர் வட்ட காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையில், உதவி ஆய்வாளர் குப்புராஜ் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநில தொழிலாளிகளுக்கு மட்டும் சிலர் கஞ்சா விற்றபதாக தெரியவந்தது. இதனையடுத்து ஒரு வட மாநில வாலிபரை கஞ்சா வாங்குபவர் போல ஏற்பாடு செய்த உதவி ஆய்வாளர் குப்புராஜ் கஞ்சா விற்பனை நபரை அணுக கூறினார். மறைந்து காத்திருந்த உதவி ஆய்வாளர் வடமாநில வாலிபருக்கு கஞ்சா விற்ற இருவரை பிடித்தார். அவர்கள் இருவரையும் விசாரணை செய்த போது நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தி வந்து மொத்த வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதில்
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் சேர்ந்த சன்யாசி மஹாராணா மகன் சிவராம் மஹாரானா, ஒடிசா மாநிலம் கெண்டுஜாகர் மாவட்டத்தை சேர்ந்த கேசரி புஹான் மகன் சுதர்சன் பூஹான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து பிடிப்பட்ட நபர்கள் சொன்ன தகவலின் பேரில் செலக்கரிச்சல் அருகே லட்சுமி நகர் பகுதியில் ஒரு புதர் மறைவில் பொட்டலம் பொட்டலமாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 37 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். இந்த 37 பொட்டலங்களும் சேர்ந்து 70 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து இருவரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Share to your friends.