திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்காவிற்குட்டபட்ட சர்கார் பெரியபாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 2 கோடி மதிப்பிலான 1.55 ஏக்கர் விவசாய நிலத்தை பல ஆண்டுகளாக உள்ளூர் வாசிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது இதை மீட்க திருப்பூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர் அதன்படி உயர்நீதி மன்றத்த்தில் வழக்குத்தொடுக்கப்பட்டு விசாரனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அந்நிலங்களை ஆக்கிரமித்துள்ள தனிநபர்களிடமிருந்து மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது அதன்படி இன்று திருப்பூர் மாவட்ட அறநிலையத்துறை துணை ஆணையாளர் செல்வராஜ் தலைமையிலான குழு இன்று வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் உதவியோடு அந்த நிலத்தை மீட்டனர் அதேபோல் செங்கப்பள்ளி அருகே தனிநபர்களாள் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 4 கோடி மதிப்பிலான 4.6 ஏக்கர் நிலைத்தையும் கையகப்படுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது..