
கோவை. அக்டோபர். 20-
மிலாதுநபி நாளில் நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விதியை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
நேற்று கோவை மாநகர் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மாநகரம் முழுவதும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பீலமேடு, வெள்ளலூர், டவுன்ஹால், சரவணம்பட்டி, கோவில்மேடு, ராமநாதபுரம், ஒன்டிபுதூர், சிங்காநல்லூர், வைசியாள் வீதி, காந்தி பார்க், ஆவாரம்பாளையம், புளியகுளம், செல்வபுரம், போத்தனூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 500 மது பாட்டில்களும், ரூ. 11 ஆயிரத்து 730 ரொக்கப் பணமும் பறிமுதல் செய்தனர்.
