
கோவை வருகிற 4-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பட்டாசு உரிமம் வழங்குவது, பட்டாசு வெடிப்பது, மற்றும் பட்டாசு வெளி ஊர்களுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தீயணைப்புத்துறையினர் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கோவையிலுள்ள 5-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் பயணிகள் பட்டாசுகளை பஸ்களில் ரயில்களில் கொண்டு செல்கிறார்களா என்பதை ஆய்வு செய்வார்கள்.
அதைப்போல பாதுகாப்பான தீபாவளியாக அமைய மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட பல்வேறு விதமான விதிமுறைகளை தீயணைப்புத் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பட்டாசுகளை வெடிக்கும் போது அருகில் என்னென்ன பொருட்களை வைத்து இருக்க வேண்டும். எதை வைக்கக்கூடாது என உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் கொடுத்து வருகின்றனர்.
தற்காலிக பட்டாசு கடை அமைக்கப்பட்ட உள்ளவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு கடைகளில் குறிப்பிட்ட அளவைவிட கூடுதலாக பட்டாசுகளை வைக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பட்டாசு கடைகளில் அருகில் வைக்கக்கூடாது. மின்கசிவால் தீ பற்றி எரியாமல் இருக்க கடைகளை பி.வி.சி பைப்புகள் ஆல் பொறுத்திருக்க வேண்டும்.
கடைகளின் அருகில் 3 தடிப்பு வாயில் வைத்திருக்க வேண்டும் . கட்டாயம் புகை பிடிக்கக்கூடாது. விழிப்புணர்வு பலகை வைத்திருக்க வேண்டும்.
உட்பட 10 விதிமுறைகள் தீயணைப்புத் துறை சார்பில் பட்டாசு கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தீபாவளி என்று ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே புறப்பட்டு செல்லும் வகையில் தீத்தடுப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.