கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது :-

கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு கடை உரிமம் ஒன்றை சாளர முறையில் பெற வேண்டும்.

அதன் அடிப்படையில் இணைய வழியாக செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது.

தற்போது மேற்படி தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு வரும் 22-ஆம் தேதி (வெள்ளி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சமிரன் கூறியுள்ளார்.

Share to your friends.