கோவை. அக்டோபர். 9-

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கோவை கோட்டத்தில் இருந்து 260 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வருகிற 14-ஆம் தேதியும், விஜயதசமி வருகிற 15-ஆம் தேதியும், கொண்டாடப்பட உள்ளது.

இதனை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து சேலத்திற்கு 25, மதுரைக்கு 30, தேனி கம்பம் தலா 10 பஸ்களும் நெல்லை, ராஜபாளையம் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் 25 பஸ்களும்,

ஊட்டியில் இருந்து சேலம் திருச்சி மதுரைக்கு 20 பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரில் இருந்து மதுரைக்கு 40 பஸ்களும் தேனி கம்பத்துக்கு தலா 15 பஸ்களும், திருச்சி 30 பஸ்களும் என மொத்தம் 100 பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து மதுரைக்கு 20, திருச்சிக்கு 10 பஸ்களும் சேலத்திற்கு 10 பஸ்கள் என மொத்தம் 40 பஸ்கள் உட்பட கோவை மாவட்டத்தில் 260 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சிங்காநல்லூர் காந்திபுரம் உக்கடம் பஸ் நிலையங்களில் இருந்து வருகிற 13-ஆம் தேதி காலை முதல் 16 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Share to your friends.