
கோவை.அக்டோபர். 8-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நார் கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நார்கள் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. விபத்தை பார்க்க வந்த முதியவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
பொள்ளாச்சி, கஞ்சம்பட்டி அடுத்த அம்மேகவுண்டனுாரில், ‘ஆதவன் காயர்ஸ்’ தென்னை நார் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டு, தென்னை நாரில் தீ பரவியது.தீ விபத்தில், தொழிற்சாலை இயந்திரங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த,
கார், பைக், தென்னை நார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்து, அங்கு சென்ற பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தை காண, அம்மேகவுண்டனுாரை சேர்ந்த பரமன், 75, மகன் மணிகண்டனுடன் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே ஸ்கூட்டரில் வந்த மோகன்ராஜ் என்பவர், பரமனை தன்னுடன் அழைத்து சென்றார். நாய் குறுக்கிட்டதால், ஸ்கூட்டர் நிலை குலைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.விபத்தில், இருவரும் காயமடைந்தனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு
அழைத்து சென்ற போது, பரமன் இறந்தார். கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.