
கோவை. அக்டோபர். 5-
அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 100 நாள் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை இழிவாக பேசிய கமல்ஹாசன் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் காந்திகாலனி கிளைகள் சார்பில் நூறுநாள் வேலைசெய்யும் தொழிலாளர் களை இழிவு படுத்திய நடிகர் கமல்ஹாசன்யும், சீமான் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இப்போராட்டத்திற்கு அ.இ.வி.தொழிலாளர்சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் அ.இ.வி.தொ. சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் நா.வெங்கடேஷ் சிபிஎம் கிளை செயலாளர் துரைசாமி மாதர் சங்கத்தின் சார்பாக மலர்செல்வி இவர்களுடன் மற்றும்தொழிலாளர்கள் 100 பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.