கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினை சார்ந்த 36 பயனாளிகளுக்கு ரூ60ம் விளையாட்டு உபகரணங்கள், காலணிகள், விளையாட்டு ஆடைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்
சமீரன் இ.ஆ.ப வழங்கினார் உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளார். இது குறித்து சங்கத்தின் நிறுவனரான தலைவி டாக்டர் .ஜெயபிரபா அவர்கள் கூறியதாவது, கடந்த ஆட்சியர் பணியின்போது அளித்த மனுவின் கோரிக்கை, இன்று நிறைவேற்றபட்டதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தில் சாதிக்கத் துடிக்கும் பல மகளிர் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களை வெளி உலகத்திற்கு கொண்டு வர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசாங்கம் மேற்கொண்டு, எங்களுக்கு உதவ வேண்டும்,மேலும் மாற்றுத்திறனாளிகள் மகளிர் வீராங்கனைகள் விளையாட்டுத்துறையில் பயிற்சி பெறுவதற்கான இடம் வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மகளிர் வீராங்கனைகள் அனைவரும் மகிழ்வுடன் தங்களது நன்றியை மாவட்ட ஆட்சித் தலைவருக்கும்,அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொண்டனர்.

Share to your friends.