கோவை அருகே 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (24), இவரது மனைவி டன்கலா (22), மூன்று வயது பெண் குழந்தை அலிசா, ஒரு வயது ஆண் குழந்தை ருத்ரா ஆகியோருடன் குப்பனூர் பகுதியில் தங்கியிருந்து மாட்டுப் பண்ணையில் வேலை செய்து வருகிறார்.
மனைவிக்கு தொடர் தலைவலி மற்றும் உடல் உபாதை இருப்பதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்ற ராஜ்குமார் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த போது, மூவரும் தூக்கில் தொங்கிய இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து உள்ளே வந்து பார்க்கும் போது அனைவரும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது ராஜ்குமார் அருகில் இருந்த அனைவரும் அழைத்துள்ளார் மேலும் பேரூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூர் காவல் துறையினர் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேற்கொண்டு தன் கணவரிடம் விசாரணை செய்து வருகின்றனர் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share to your friends.