கோயம்புத்தூர், 17 ஆகஸ்ட் 2021: கோவிட் 19 பெருந்தொற்றுப்பரவல்  தீவிரமாக இருந்த  காலத்தின் போது கோயம்புத்தூர் பிராந்தியத்தில் கண் அழற்சியின் ஒரு வடிவமான  கருவிழிப்பட  அழற்சி  பாதிப்புள்ள  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.  இம்மாநகரில் எமது மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 10-15 கருவிழிப்படல  பாதிப்புள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். ஒரு மாதத்தில் இது ஏறக்குறைய 5 புதிய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டுகிறது, என்று கோயம்புத்தூர் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் கண் சிகிச்சை  நிபுணர்களான டாக்டர். ஜி. ஆதித்யா மற்றும் டாக்டர். ஜெயஸ்ரீ அருணாபிரகாஷ் ஆகியோர் கூறினர்.  

கருவிழிப்படல அழற்சிக்கும், கோவிட் – 19 தொற்றுக்கும் இடையிலான பிணைப்பும், தொடர்பும் இன்னும் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்றாலும் கூட, கோவிட் – 19 தொற்று வந்த கடந்தகால வரலாறு, புதிய கருவிழிப்பட அழற்சியுள்ள நோயாளிகளிடம் மிக பொதுவான ஒரு அம்சமாக இருக்கிறது.  கண் சிவத்தல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூசுதல், பார்க்கும்போது பொருட்கள் மிதப்பதாக தோன்றுதல் மற்றும் குறைந்துவிட்ட பார்வைத்திறன் ஆகியவை கருவிழிப்படல அழற்சியின் ஆரம்பநிலை அறிகுறிகளாக இருக்கின்றன.  கோவிட் – 19 தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள், இத்தகைய அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்படுமானால். உடனடியாக கண் மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும்.  ஏனெனில், கருவிழிப்படல அழற்சியினால் ஏற்படும் பார்வைத்திறன் இழப்பை சரிசெய்ய இயலாது மற்றும் இந்த சிகிச்சையானது, அழற்சி தீவிரமாக இருக்கும் காலம் முழுவதும் கண்டிப்பாக தொடரப்பட வேண்டும்.  

கோவிட் – 19 தொற்றால் கண்களில் ஏற்படும் வெளிப்படுதல்கள் என்ற தலைப்பு மீது மெய்நிகர் முறையில் ஊடகவியலாளருடன்  நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற  டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆதித்யா, 12 வயதிலிருந்து, 65 வயது வரை அனைத்து வயது பிரிவுகளிலும் கருவிழிப்படல அழற்சி நோயாளிகள் இருக்கின்றனர் என்று கூறினார்.  இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், நோய் எதிர்ப்புத்திறன் சார்ந்த சில எதிர்வினைகள், கருவிழிப்படல அழற்சியை தூண்டிவிடக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்.  பெரும்பாலான நேர்வுகளில் கருவிழிப்படல அழற்சி நோயாளிகளுக்கு செய்யப்பட்ட இரத்தப்பரிசோதனைகள், அதிகரித்திருக்கின்ற அழற்சிநிலை குறிப்பான்களையும் மற்றும் பாசிட்டிவ் கோவிட் – 19 பிறபொருள் எதிரிகளையும் (யுவெiடிழனநைள) காட்டின.  கோயம்புத்தூரில் கோவிட் – 19-ன் முதல் மற்றும் இரண்டாம் அலை ஆகிய இரு காலஅளவுகளின்போதும் கருவிழிப்படல அழற்சி நேர்வுகள் இருந்திருக்கின்றன.  ஆனால், இரண்டாவது அலை காலத்தின்போது அதிக எண்ணிக்கையில் பாதிப்பு நேர்வுகளை நாங்கள் பார்க்கிறோம்.  கோயம்புத்தூரில் இரண்டாவது அலையின்போது கோவிட் – 19-ன் தொற்றுத்தன்மையின் தீவிர அளவு அதிகரிப்பு அல்லது கோவிட் தொற்றின் புதிய மரபுவகை காரணமாக இது ஏற்பட்டிருக்கக்கூடும், என்று கூறினார். 

டாக்டர். ஆதித்யா மேலும் பேசுகையில், கருவிழிப்படல அழற்சியின் புதிய நேர்வுகளை கோவிட் – 19 தொற்றோடு நேரடியாகத் தொடர்புபடுத்த இயலுமா அல்லது  அவைகள் வெறுமனே ஒரு சேர்க்கை மட்டுமா என்பதை தீர்மானிப்பதற்கு நீண்டகால அளவிற்கு மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வும், அதிக நோயாளிகளும் நமக்குத் தேவைப்படும்,” என்று குறிப்பிட்டார். இப்பாதிப்பிற்கான பொதுவான சிகிச்சை என்பது, பாதிப்பு தீவிரத்தைச் சார்ந்து மாத்திரைகள் அல்லது சொட்டு மருந்துகள் வடிவத்திலான ஸ்டீராய்ட்ஸ்களாக இருக்கிறது. 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண்சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர். ஜெயஸ்ரீ அருணப்பிரகாஷ், கோவிட்  19 மற்றும் கண் ஆரோக்கியம் குறித்துப் பேசுகையில், உடலின் அனைத்து பாகங்களையும் கோவிட் – 19 பாதிக்கக்கூடும் என்பது ஏற்கனவே நன்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது; கண்களும் இதற்கு விதிவிலக்கானவை அல்ல. தொற்று இருக்கும்போது அல்லது தொற்று பாதிப்பிற்குப் பிறகு கண் சார்ந்த பிரச்சனைகள் ஏதாவது வடிவத்தில் உருவாவதற்கான சாத்தியங்கள் கணிசமாக இருக்கின்றன. 

கோவிட் 19 தொற்றில் மிகப்பெரிய  இடர்அம்சம் என்பது, இரத்தஓட்டத்தை தடுக்கிறவாறு இரத்தநாளங்களில் இரத்த உறைவுக்கட்டிகள் உருவாகும் நிலையோடு இணைந்ததாக இருக்கிறது.  கண்களில் உள்ள இரத்தநாளங்கள் மிக குறுகலானவை என்பதால், விழித்திரைக்கு செல்லும் இரத்தஓட்டத்தை ஒரு இரத்த உறைவுக்கட்டியால் எளிதாக தடுத்தி நிறுத்திவிட முடியும்.  ஆகவே, கோவிட் – 19 நோயாளிகளிடம் இரத்தநாள அடைப்புகளின் காரணமாக, விழித்திரை சேதம் ஏற்படுவதற்கு சாத்தியமிருக்கிறது.  விழித்திரை இரத்தநாள நோய்களில் ஒரு வகையான விழித்திரை அழிவுநோய் (ரெட்டினோபதி) என்பதற்கான இடர்வாய்ப்பை இது அதிகரிக்கிறது.  

முடிச்சுகள் பாதிப்பு நோயாளிகளுக்கு ஏற்பட்ட நேர்வுகளும் இருக்கின்றன.  குறிப்பாக விழிப்புள்ளி பகுதியின் வெளிப்புறத்திலும் மற்றும் பின்புற போல் பகுதியிலும்  செல்கள் அல்லது திசுக்களில் இயல்புக்கு மாறான வீக்கமே முடிச்சுகள் எனப்படுகின்றன, என்று கூறினார்.  

சமீபத்திய ஆய்வுகளை மேற்கோளாக சுட்டிக்காட்டிய டாக்டர். ஜெயஸ்ரீ அருணப்பிரகாஷ், கண்சிவத்தல், கண்வலி, வெளிச்சத்தைப் பார்க்க கூசுதல் மற்றும் கண் புண்கள் ஆகியவை ஏறக்குறைய 10 சதம் கோவிட் 19 நோயாளிகளிடம் பொதுவான அம்சங்களாக இருக்கின்றன என்று கூறினார். ஆனால், கோவிட் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளில் கணிசமான விழுக்காட்டினர், அவர்கள் மீண்ட காலத்திலிருந்து சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குள் இத்தகைய கண் பிரச்சனைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.  தீவிரமான வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கான இடர்வாய்ப்பு, தீவிர தொற்றுகளிலிருந்து மீண்டிருக்கின்ற மற்றும் மருத்துவமனைகளில் நீண்டநாட்கள் தங்கியிருந்த நோயாளிகள் மத்தியில் குறிப்பாக அதிகமாக இருக்கிறது.  தங்களது பார்வைத்திறன் தொடர்பான சிக்கல்களை, கோவிட் தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட அசதி அல்லது பலவீனத்தோடு தொடர்புடையவை என்று மக்கள் உதாசீனம் செய்யக்கூடாது; அதற்குப் பதிலாக, அவர்களது கண்களை கண் மருத்துவ சிறப்பு நிபுணரிடம் காட்டி, உடனடியாகப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 

கண் அழற்சி, கருப்பு பூஞ்சை, கண்ணில் அக்கி அம்மை மற்றும் கருவிழிப்படல அழற்சி ஆகியவற்றிற்கும் கூடுதலாக கோவிட் – 19 தொற்றானது, பார்வை நரம்பை சேதப்படுத்துகின்ற வீக்கத்தை விளைவிக்கக்கூடும்.  கண்ணில் ஏற்படும் அக்கி அம்மை பாதிப்பு, கண் இமைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சரும கொப்புளங்கள் மற்றும் தோல் உரிதலை ஏற்படுத்தும்; கருப்பு பூஞ்சை என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற முக்கோர்மைகோசிஸ், மூக்கடைப்பையும், கருப்பான திரவ வெளியேற்றத்தையும், கண்களைச் சுற்றி வீக்கத்தையும், மோசமான நாற்றத்தையும், மங்கலான அல்லது இரட்டைப் பார்வை நிலையையும், பற்கள் மற்றும் மேல் அன்னத்தை சேதப்படுத்துவதையும் விளைவிக்கும்.  

கூட்டம் நிறைந்த பகுதிகளில் இருக்கும்போது கோவிட் – 19 வைரஸ் உடன் தொடர்பு ஏற்படுவதிலிருந்து தங்கள் கண்களைப் பாதுகாக்க மக்கள் கண் கண்ணாடிகளை அணிய வேண்டும் என்றும் மற்றும் அவசியமில்லாமல் கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் மக்களை டாக்டர். ஆதித்யா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.  கோவிட் – 19 தொற்றின் முதல் அறிகுறியாக இருக்கக்கூடிய கண் சிவத்தல் உருவான உடனேயே மருத்துவ ஆலோசனையையும், சிகிச்சையையும் உடனடியாக அவர்கள் பெறவேண்டும்.  ஏனெனில், கோவிட் தொற்றிலிருந்து மீண்டதற்குப் பிறகு, குறைந்தபட்சம் சுமார் 6 மாதங்கள் வரை பல்வேறு வைரல் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்குப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் கோவிட் – 19 தொற்றின் விளைவுகள் அவர்களை வைக்கிறது, என்று டாக்டர். ஜெயஸ்ரீ கூறினார்.

ஸ்டீராய்டு மருந்து தொடர்பாக கண்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மேலும் பேசுகையில், கோவிட் – 19, முக்கியமாக நுரையீரல்களைப் பாதிப்பதால், நுரையீரல்கள் மற்றும் பிற உடலுறுப்புகளில் ஏற்படும் தீவிர சிக்கல்களைத் தணிப்பதற்கு ஸ்டீராய்டுகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாக இருக்கக்கூடும் என்று டாக்டர். ஜெயஸ்ரீ அருணப்பிரகாஷ் கூறினார். ஆனால், நோயெதிர்ப்புத் திறன் அமைப்பை ஸ்டீராய்டுகள் ஒடுக்குவதாக அறியப்பட்டுள்ளன மற்றும் வைரல் மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கான சாத்தியத்தையும் இது உருவாக்கக்கூடும்.  ஆகவே, உட்செல்லும் ஆக்சிஜன் சிகிச்சை முறை மற்றும் ஸ்டீராய்டுகள் இடம்பெற்ற சிகிச்சையை மேற்கொண்ட நபர்கள் மற்றும் நீண்டகாலம் தீவிர சிகிச்சைப்பிரிவில் தங்கியிருந்த நோயாளிகளுக்கு கண் மருத்துவ பரிசோதனை மிகவும் முக்கியமாகும்.  கோவிட் – 19 சிகிச்சையை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், நோயாளிகளின் கண்களைப் பரிசோதிப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.  பார்வைத்திறன் இழப்பு அல்லது குறைந்திருக்கிறது என்று நோயாளிகள் தெரிவிக்கும்போது குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுகிறதா என்று மருத்துவர்கள் பார்க்க வேண்டும் மற்றும் பார்வைத்திறனை பாதிக்கும் சிக்கல்கள் இருக்கிறதா என்று அறிய உரிய சோதனைகளை செய்ய வேண்டும்.  முறையான மதிப்பீட்டைச் செய்யவும் மற்றும் கண்களுக்கான சிகிச்சையை வழங்கவும், விழித்திரை மற்றும் கருவிழிப்படல சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுவார்கள். 

தாங்களே முன்வந்து கண்பரிசோதனை செய்துகொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தொற்றுக்கிருமிகளின் அளவைக் குறைப்பதும், நோயாளிகள் தாங்களாகவே இயல்பாக சுவாசிப்பதை உறுதிசெய்வதும் மற்றும்இன்றியமையா அம்சங்கள் கட்டுக்குள் இருக்குமாறு செய்வதும்தான் கோவிட் 19 சிகிச்சையில் முன்னுரிமை செலுத்த வேண்டியவையாக இருந்து வருகின்றன.  ஆனால், கோவிட் தொற்றுக்காக நோயாளிகள் சிகிச்சையைப் பெறுகின்றபோது, கண் பாதிப்பிற்கான பல அறிகுறிகள் கவனிக்கப்படாமல் விடப்படலாம் என்பதையே இது குறிக்கிறது.  ஆகவே, கோவிட் தொற்றிலிருந்து மீண்டதற்குப் பிறகு நோயாளிகள், அவர்களாகவே முன்வந்து ஒரு கண் மருத்துவரை சந்தித்து, தங்களது கண்களை முறைப்படி பரிசோதனை செய்துகொள்வது இன்றியமையாதது, என்று  டாக்டர் ஜெயஸ்ரீ கூறினார்.

Share to your friends.