தமிழகம் முழுவதும் வருகின்ற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் இன்று மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28-6-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7-2021 காலை 6-00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வகை 2 – (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை இராமநாதபுரம் இராணிப்பேட்டை சிவகங்கை.

தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள். வகை 3- (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share to your friends.