கோவை. ஜூன். 16- கோவை கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால். கடந்த சில வாரங்களுக்கு முன்பு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் கோவை பகுதியில் மசாஜ் சென்டரில் உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணெய் குளியல் உட்பட பல்வேறு விளம்பரங்கள் மூலம் மக்களை அழைத்து அங்கு விபச்சார அழகிகளை வைத்து தொடர்ந்து விபச்சாரம் அரங்கேறி வந்துள்ளது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவை, சரவணம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஊரடங்கு காரணமாக சலூன்கள், ஸ்பாக்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.இந்த நிலையில் இருகூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ராம்குமார்(30) நேற்று சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என கூறி இளம்பெண்களை காண்பித்துள்ளார். இதனால் பயந்து போன ராம்குமார் கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேரில் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் .அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதை அடுத்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அரவிந்தக்ஷன் என்பவரின் மகன் அஜித் மோன் (32) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பினு கண்டப்பா என்பவரின் மகன் மனிஷா (26 )ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்திற்காக அழைத்து வரப்பட்டிருந்த பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Share to your friends.