கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பழங்குடி மக்களின் வீடுகள் தொடர்ந்து பெய்த மழையால் சேதம், நிரந்தர வீடுகளை கட்டித் தர கோரிக்கை, செயல்படுத்துமா புதிய அரசு,? சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்,
புயல் மற்றும் கடும் மழையினால் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியினர் கிராம குடியிருப்புகள் கடும் சேதம் அடைந்து உள்ளன. கோவை ஆனைமலை வன எல்லைக்கு உட்பட்ட 14 கிராமங்களில் நமக்கு தகவல் தெரிந்த சின்னார்பதியில் 7 வீடுகளும்,காட்டுபட்டியில் 7 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. மற்ற கிராமங்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை தொடர்ந்து மழையும் காற்றும் பயங்கரமாக இருப்பதால் அவர்களை தொடர்புகொள்ள முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு இனிமேலும் காலம் தாமதிக்காமல் உடனடியாக புலிகள் காப்பக பகுதியில் வசிக்கும் பழங்குடிகளுக்கு தரமான வீடுகளை அமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று புதியதாக மக்களுக்கான அரசாக அமைந்துள்ள தமிழக அரசு இந்த பழங்குடி மக்களுக்கு உடனடியாக அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் நாம்.
