கோவை. மே. 8- கோவை போலீஸ் கமிஷனராக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் உளவுப்பிரிவு ஏடிஜிபியாக பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் சமயத்தில் சுமித் சரண் மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த நிலையில் பல்வேறு கட்சி சார்பில் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டு டேவிட்சன் தேவாசீர்வாதம் கோவை மாநகர சிட்டி கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் நிலையில் உள்ள அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருக்கக்கூடிய டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டு உளவுப்பிரிவு ஏடிஜிபி ஆக பொறுப்பேற்க உள்ளார். ஆதலால் கோவை மேற்கு மண்டல ஐஜியாக உள்ள அமல்ராஜ் கோவை புதிய சிட்டி கமிஷனர் பதவி ஏற்கும் வரை கூடுதலாக கமிஷனர் பொறுப்பையும் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து விடை பெறுவதற்கு முன்பாக டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்துள்ள டூவீட்டில் நான் கோவையில் பணியாற்றும் பொழுது தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என கூறி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share to your friends.